அம்பாலாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து

டெல்லி: அம்பாலாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது. அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்துக்கு சரக்கு ரயில் வந்தபோது பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த ரயில் விபத்தையடுத்து, சண்டிகரில் இருந்து டெல்லி மற்றும் டெல்லியில் இருந்து சண்டிகர் செல்லும் ரயில் பாதையில் பாதிப்பு ஏற்பட்டது. பலத்த இடி சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது ரயில் பாதையில் கண்டெய்னர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டதாக அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

இந்த கன்டெய்னர்கள் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவுக்கு விழுந்துள்ளது. தண்டவாளத்தில் சிதறி கிடக்கும் கண்டெய்னர்களை அகற்றும் பணி நடைபெற்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்டெய்னர்கள் விழுந்ததால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சரக்கு ரயிலில் இருந்த கண்டெய்னர் பெட்டிகள் காலியாக இருந்ததே இந்த விபத்துக்கான காரணமென முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post அம்பாலாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: