தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ரயில்களில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வருகிறது. எனவே அக்டோபர் 28,29, 30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுகூகு பயணம் செய்ய பலரும் திட்டமிடுவர். அதன்படி அக்.28ல் பயணம் செய்ய இன்றும், அக் 29ம் தேதி பயணம் செய்ய நாளையும், அக்டோபர் 30ம் தேதி பயணம் செய்ய நாளை மறுநாளும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது : பெரும்பாலான பயணியர், இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றர். இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காத்து வருகிறது. தீபாவளி முன்பதிவுகளை கணக்கிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கம், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து ரயில்வே மண்டலங்கள் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: