ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்தது. உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான தேதி தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட் 21ம் தேதி மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் யு.ஜி.சி. நெட் மறுதேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாடங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான சி.எஸ்ஐஆர்-நெட் தேர்வு ஜூலை 25-27 வரை நடைபெறும். உதவிப் பேராசிரியர் பணிக்கு யு.ஜி.சி., சி.எஸ்ஐஆர்-நெட் என்ற தேர்வுகளை தேசிய முகாமை நடத்துகிறது. டார்க்-வெப் தளத்தில் வினாத்தாள் கசிந்ததாக வந்த தகவலை அடுத்து தேர்வை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்திருந்தது. ஜூலை 18ல் நடைபெற்ற யு.ஜி.சி. நெட் தேர்வை மறுநாளே ஒன்றிய அரசு ரத்து செய்ததால் தேர்வுகள் அதிர்ச்சி அடைந்தனர்.

யு.ஜி.சி. நெட் தேர்வை 9.85 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் அந்த தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட சி.எஸ்ஐஆர்-நெட் தேர்வு ஜூலை 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்துக்கான NCET நுழைவு தேர்வு ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 13ம் தேதி நடைபெற இருந்த NCET நுழைவுத்தேர்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

The post ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: