சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த பெண்ணை அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை வீட்டில் காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அவரிடம் நேற்று முதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அர்ச்சகர் பெண்ணிடம் அத்துமீறியது தொடர்பாக ஆவணங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி இது போன்று வேறு ஏதேனும் பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்தும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு ஆளான கார்த்திக் முனுசாமியை காளிகாம்பாள் கோயில் அறங்காவலர்கள் குழு சஸ்பெண்ட் செய்துள்ளது.
The post பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: கோயில் அர்ச்சகர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.