டெல்லி: ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர் ஃபிகோ மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமராக ராபர்ட் பிகோ(59) பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று தலைநகரில் இருந்து 150கிமீ தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் உள்ள கலாச்சார மையத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் வௌியே வந்த ராபர்ட் பிகோ செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் நான்கு முறை தொடர்ந்து சுட்டதில் பிரதமர் ராபர்ட் பிகோவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
மேலும் அவரது மார்பிலும் குண்டு பாய்ந்தது. இதில் ரத்த வௌ்ளத்தில் சாய்ந்த பிகோ, மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராபர் ஃபிகோ மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது.
இந்த கோழைத்தனமான மற்றும் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ராபர்ட் விரைவில் உடல்நலம் பெற வாழ்த்துகிறேன். ஸ்லோவாகியா நாட்டு மக்களுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமர் மோடி கண்டனம் appeared first on Dinakaran.