அதேபோல் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தமிழக மக்களை பொறுத்த வரையில் கழகம் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன். ராமநாதபுரத்தில் என்னை தோற்கடிக்க 6 பன்னீர் செல்வத்தை நிறுத்தினார்கள். அதன் முடிவு டெபாசிட் இழந்தார்கள். ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். விஜய் மாநாடு நடத்தியவுடன் வாழ்த்து தெரிவித்தேன், விஜய் செயல்பாடு குறித்து பின்னர் கருத்து தெரிவிக்கிறேன்” என்றார்.
The post என்னை தோற்கடிக்க சதி செய்த எடப்பாடி பழனிசாமிக்கு, ராமநாதபுரத்தில் டெபாசிட் பறிபோனதுதான் மிச்சம்: ஓ.பன்னிர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.