தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் மோசம்; ஆலந்துரில் காற்றின் தரக்குறியீடு 251 ஆக பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கப்படும் நிலையில், சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அயோத்தியில் 25 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளி கொண்டாட்டப்பட்டது. விண்ணை முட்டும் இசை முழக்கங்களுடன் மக்கள் ஆரவாரம் செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க தீபாவளி பண்டிகை காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கப்படும் நிலையில், சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. ஆலந்துரில் காற்றின் தரக்குறியீடு 251ஆகவும், அரும்பாக்கத்தில் 201, பெருங்குடியில் 196, மணலியில் 180, ராயபுரத்தில் 162ஆக உள்ளது.

The post தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் மோசம்; ஆலந்துரில் காற்றின் தரக்குறியீடு 251 ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: