வட தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும், அதனால் வட தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். அதனால் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை மற்றும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றும் சில இடங்களில் வெயில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஈரோடு, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர், தர்மபுரி 106 டிகிரி, வேலூர், திருத்தணி, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் 104 டிகிரி, தஞ்சாவூர், மதுரை, கோவை மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

அதனால் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். 30ம் தேதி முதல் மே 1ம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். அத்துடன், 30ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

The post வட தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் appeared first on Dinakaran.

Related Stories: