இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல்தான் பிரதமர் தோல்வி பயத்தால் பாஜவினர் பிரிவினைவாதம் பேசுகின்றனர்: துரை வைகோ பேட்டி

சென்னை: மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கோடைகால நீர் மோர் பந்தலை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் சிறப்பான ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணி அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கும்பொழுது ராகுல் காந்திதான் என கூறினேன்.

இந்தியா கூட்டணி அமைந்த பிறகும் அதை கூறினேன். அவருக்காக தான் நாங்கள் ஓட்டு கேட்டோம். எங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் அனைவரும் இந்தியா கூட்டணிக்கு ஓட்டு போடும்போது ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்றுதான் ஓட்டு போட்டார்கள். தோல்வி பயத்தால்தான் பாஜ பிரிவினைவாதம் பேசி வருகிறது. இந்தியா பல மதங்கள், ஜாதிகள் மொழிகளைக் கொண்ட நாடு.

ஒரு பிரதமராக இருப்பவர் பிரதமராக வரவேண்டியவர் அதற்கு முயற்சி செய்பவர் மதம், ஜாதி ரீதியாக பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்பாக இருந்த பிரதமர்கள் இப்படி பேசியதில்லை. பாஜவை பொறுத்தவரை வெற்றி பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

The post இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல்தான் பிரதமர் தோல்வி பயத்தால் பாஜவினர் பிரிவினைவாதம் பேசுகின்றனர்: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: