உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டி என சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு!

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் அம்மாநிலத்தின் கன்னோஜ் மக்களவை தொகுதியில் இம்முறை போட்டியிட உள்ளதாக சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கன்னோஜ் விளங்குகிறது. ஏற்கெனவே, 2000, 2004, 2009ம் ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் கன்னோஜ் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச முதல்வராக 2012இல் பொறுப்பேற்ற பின், தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கன்னோஜில் களம் காணுகிறார். 4ம் கட்ட வாக்குப்பதிவு நாளான மே4-ல் கன்னோஜ் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், கன்னோஜ் மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவ் நாளை(ஏப். 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னோஜ் தொகுதியில் சமாஜவாதி கட்சி வேட்பாளராக அகிலேஷ் யாதவின் சகோதரரின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டி என சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: