வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!

நீலகிரி: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் முறைக்கு கொடைக்கானலில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கொடைக்கானலுக்கு சீசன் காலங்களில் அளவுக்கு அதிக மான வாகனங்கள், சுற்றுலா பயணிகள் என சுற்றுலாத் தலங்களே திணறும் அளவுக்கு கூட்டம் அலை மோதுகிறது. இதனால் மே 7 முதல் ஜூன் 30 வரை கரோனா காலத்தில் கடைப்பிடித்ததை போல கொடைக்கானல் செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் முறை அமல்படுத்தப் பட்டதற்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள தங்களின் வருவாய் குறையும் என ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் வரவேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.

இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீசனில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் ஆண்டு முழுவதும் வாழ்க்கை நடத்துவதாக கொடைக்கானல் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இ-பாஸ் முறையால் கொரோனா காலத்தை போல தங்கள் வாழ்வாதாரம் முடங்கி விடும் என கொடைக்கானல் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: