சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை தீவிர சோதனையில் ரூ.1.20 லட்சம் கைப்பற்றப்பட்டது

கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக சீனிவாசன் பணிபுரிந்து வருகிறார் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக வருடாந்திர தணிக்கை ஆய்வு நடைபெற்று வந்தது இந்த ஆய்வின் மீது தணிக்கை குழு மேல ஆய்வு ( Local Passing ) செய்வதற்காக கடலூரைச் சேர்ந்த பூங்குழலி அசிஸ்டன்ட் டைரக்டர் உள்ளூர் தணிக்கை குழு மற்றும் விஜயலட்சுமி இன்ஸ்பெக்டர் உள்ளூர் தணிக்கை குழு ஆகிய இருவரும் சேத்தியா தோப்பு தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தணிக்கை மேல் ஆய்வு செய்து கடந்த சில வாரங்களாக நடைபெற்ற வருடாந்திர ஆய்வு தணிக்கை குழு அறிக்கையின் மீது மேலாய்வு செய்து அறிக்கை அனுப்புவதற்காக வந்திருந்தனர்.

இந்த அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் தணிக்கை குழு அறிக்கை குறிப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் சமூகமாக நடந்து கொள்ளவும் இந்த அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர் மேற்சொன்ன உள்ளூர் தணிக்கை குழுவின் அசிஸ்டன்ட் டைரக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர்களுக்கு லஞ்ச பணமாக கொடுப்பதற்காக கிடைத்த தகவலை பெற்று கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் மற்றும் கடலூர் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் சுபத்ரா ஆகியோர்களின் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த திடீர் ஆய்வின்போது சேத்தியாதோப்பு தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் கணக்கில் வராத லஞ்ச பணம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது மேலும் தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை தீவிர சோதனையில் ரூ.1.20 லட்சம் கைப்பற்றப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: