மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பாபாசாகேப் அம்பேதகர் பிறந்தநாளான இன்று தனது தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்காக அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழுவை பாஜக தலைமை அமைத்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த நாடும் இந்த ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயர் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது’ என்று தெரிவித்தார். இந்த தேர்தல் அறிக்கை ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

*பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்

* ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படும்

* பொது வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்

* 2025ம் ஆண்டு பழங்குடியினர் பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும்

* பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்

* 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவக்காப்பீடு

* முத்ரா கடன் திட்டம் 20 லட்சமாக அதிகரிப்பு

* ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும்

* 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்படும்

* வேலைவாய்ப்பு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்

* பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்

* திருங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

* பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுக்க தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்

* மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த மலைவாழ் மக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்க்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்

* திருவள்ளுவர் கலாச்சார மையம் உருவாக்கப்படும்

* தமிழ் மொழியை எல்லா இடங்களிலும் பரப்பும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

* 2036ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை

* லாரி ஓட்டுநர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம்

* நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* நாட்டில் புதிய சேட்டிலைட் மையங்கள் ஏற்படுத்தப்படும்

* இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படும்

* வந்தே பாரத் மெட்ரோ, ஸ்லீப்பர் உட்பட 3 வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்

* மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்படும்

* பயோ கேஸ், சூரிய ஒளி மின்சக்தி உள்ளிட்ட சுய சார்பு இந்தியாவுக்கான படும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்

* சூரிய ஒளி மூலம் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம்

* நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் தொடர்ந்து செயல்படும்

* பெண்களுக்கு ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்

The post மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Related Stories: