நாகை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படையினர் நாகை வந்தனர். நாகை மாவட்டத்தில் 27 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நீர்மூழ்கி பம்புகள் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.