சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜராகியுள்ளார். கோவையில் கனகராஜ் சகோதரர் தனபால் 2வது முறையாக சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜரானார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறையும் வரை பகலில் கூட எளிதாக கோடநாடு பகுதிக்கு சென்று விட முடியாது, ஆனால் அந்த இடத்தில் தான் அவர் மறைவுக்கு பின்பாக ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது அதாவது கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிபிசிஐடி வழக்கு என்பது மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. வழக்கில் மிக முக்கிய நபராக பார்க்கப்படக்கூடிய கனகராஜ் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்தார். இந்த சூழ்நிலையில் தான் இது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்த அவருடைய சகோதரர் தனபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தார்கள், அதன் அடிப்படையில் கடந்த 14ம் தேதி முதல் முறையாக கோவையில் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகி 50 பேர் கொண்ட பட்டியலை தந்திருந்தார் எடப்பாடி பழனிசாமி பெயரும் இருந்தது, விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அப்போது 40 கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார், வீடியோ காட்சி மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதனை தொடர்ந்து விசாரணை அன்றைய தினம் நிறைவடையாத நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் வரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள்.அதன் அடிப்படையில் இன்றைய தினம் அவரை ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் தெரிவித்திருந்தார்கள் அதன் அடிப்படையில் சேலத்தில் இருந்து இன்றைய தினம் அவர் ஆஜராகிருகின்றார்.
The post கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு கனகராஜ் சகோதரர் தனபால் ஆஜர் appeared first on Dinakaran.