3 வீரர்களுக்கு விசா மறுப்பு.! இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீன தூதர் பேட்டி

கொல்கத்தா: மூன்று வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்ட நிலையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று சீன தூதர் கூறினார். சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தை சேர்ந்த வுஷூ வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டதால், அவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு துறை உறவில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவுக்கான சீன தூதர் ஜா லியு கூறுகையில், ‘இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் தற்போது சரியான பாதியில் செல்கிறது.

இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உலக அமைதி, வளர்ச்சி, தொலைநோக்கு பார்வையுடன் பிரச்னைகளை அணுகுவது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து சீன தூதரகத்திடம் பேசி வருகிறேன்’ என்றார்.

The post 3 வீரர்களுக்கு விசா மறுப்பு.! இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீன தூதர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: