கடந்த காலங்களில் குமரன் கந்தர்வ கோட்டையில் பணியாற்றிய போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை அவருக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்கள், ஓய்வூதியம் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் குமரனுக்கு நடந்த சம்பவம் மற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
The post பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: பணி ஓய்வு பெறும் நாளில் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர் appeared first on Dinakaran.