அதிரடியாக சரிந்த நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் குஷி..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக சரிந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5620க்கும், சவரன் ரூ.44,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்கு குறைவதும், அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வதுமாகவும் வாடிக்கையாக உள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. தங்கம் விலை கடந்த 60 நாளில் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்துள்ள காரணத்தால் சாமானிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் சிறுக சிறுக சேமித்த பணத்தை பெருமளவில் தங்கத்தை நீண்ட கால முதலீடாக செய்வது வழக்கம்.

நேற்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.5645க்கும், சவரன் ரூ.45,160க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.76.80க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,620க்கும், சவரன் ரூ.44,960க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் உயர்ந்து ரூ.76.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post அதிரடியாக சரிந்த நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் குஷி..!! appeared first on Dinakaran.

Related Stories: