கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

ராஜபாளையம், ஜன.29: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ராஜபாளையம் தாலுகாவை சுற்றியுள்ள 36 கிராம நிர்வாக அலுவலர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், இணைய வசதியுடன் கூடிய கணினி உட்பட நவீன மயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம், கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்றி அமைத்தல், தேர்வு நிலை சிறப்பு நிலை என பெயர் மாற்றம் செய்தல், பதவி உயர்வில் கால வரம்பை மூன்று ஆண்டுகளாக மாற்றி தர வேண்டும்,

தகுதிக்கேற்ப ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இப்போராட்டம் காரணமாக, ராஜபாளையம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்படவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

Related Stories: