பந்தலூர், ஜன. 29: பந்தலூர் அருகே அத்திக்குன்னா தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம் தேவாலா வனச்சரகத்திற்கு உட்பட்ட அத்திக்குன்னா தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருப்புகள் உள்ளது.
குடியிருப்பை ஒட்டிய தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் குறித்து தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தேவாலா வனத்துறையினர் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு சென்று சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தொழிலாளர்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
