ராஜபாளையம், ஜன.29: ராஜபாளையத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முறை குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில், விருதுநகர் மாவட்ட அளவிலான மாதிரி தேர்தல் வாக்குச்சாவடி மையம் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட வழங்கல் அலுவலருமான அமர்நாத் மேற்பார்வையில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி தலைமையில் தேர்தல் துணை வட்டாட்சியர் வாசுகி மாரிராஜ், நேரடியாக வாக்குப்பதிவு முறை குறித்து வாக்காளர்களுக்கு விளக்கமளித்தார். மில் தொழிலாளிகள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்பட பொதுமக்ள் அதிகம் கூடும் பகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
