அன்னதானம் வழங்கல்

திருப்பூர், ஜன. 29: திருப்பூரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. இலவச ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் மருத்துவ சேவை தேவைப்படுபவர்களை இலவசமாக மருத்துவமனைக்கும், வீடுகளுக்கும் அழைத்து வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் இந்திராசுந்தரம் தலைமையில் சுமைப்பணி தொழிலாளர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் என 350க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழிலதிபர் கியாரா ஜினேஷ்சாந் மற்றும் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவன செயலாளர் ராஜா முகம்மது உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

 

Related Stories: