மதுரை : கோயில் நிலப் பகுதியில் குவாரி செயல்பாட்டுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் நிலங்களில் குவாரி செயல்பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் எவ்வாறு அனுமதி வழங்கியது? என்று ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். கரூர் மாவட்டத்தில் கோயில் நிலத்தில் குவாரிகள் செயல்பட தடை விதிக்க கோரிய வழக்கில், கனிம வளத்துறை இயக்குநர், கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
