ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!!

சென்னை: ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தலுக்கு கார் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் ஏடிஜிபி ஜெயராம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துறை ரீதியிலான விசாரணை நடந்தது வந்தது. இந்த நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடம் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில் ஜெயராமுக்கு இந்த வாரம் பணியிடம் ஒதுக்கி உத்தரவு பிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற மே மாதத்துடன் ஜெயராம் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: