ஒட்டன்சத்திரம் ஜன. 26: ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றியம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இதில் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே. பாலு, ஒன்றிய துணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி சண்முகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிபாரதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
