பவானி, ஜன. 28: அம்மாபேட்டையில் அரசு நிதி உதவி பெறும் பெரியசாமி உயர்நிலைப்பள்ளி மற்றும் வேலவன் வித்யாலயா தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் எம்பியும், கல்விக் குழுத் தலைவருமான என்.ஆர்.கோவிந்தராஜர், தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
முன்னதாக, பள்ளி மாணவ, மாணவிகள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேச தலைவர்களின் வேடமணிந்து பங்கேற்ற தேச ஒற்றுமை ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பேச்சு, கட்டுரை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
