கோவை, ஜன.28: கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (53). இவர், தனது மகன் விவேக் என்பவருடன் பைக்கில் வடவள்ளி சிறுவாணி ரோட்டில் சென்ற போது நாய் குறுக்கே பாய்ந்தது. இதில், நிலை தடுமாறிய விவேக் பிரேக் பிடித்த போது இருவரும் தடுமாறி விழுந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இறந்தார். விவேக் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
