திருமங்கலம் அருகே பால் பண்ணையில் திருடிய 2 பேருக்கு தர்மஅடி

திருமங்கலம், ஜன. 28: திருமங்கலம் அருகே கரடிக்கல் அடுத்த நல்லபிள்ளைபட்டியை சேர்ந்தவர் ஜெயசூரியா (25). இவர் மேலஉரப்பனூரில் பால் பண்ணை வைத்துள்ளார். இவரது பண்ணையில் குருவனந்தபுரத்தினை சேர்ந்த ராம்ஜி பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ஜெயசூரியா பண்ணையை மூடிவிட்டு சென்றார். ராம்ஜி மட்டும் பண்ணையில் தூங்கியுள்ளார். நள்ளிரவு பண்ணையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 2 மர்மநபர்கள் அங்கிருந்த 2 செல்போன்கள், ஆம்பிளிபயர், ஸ்பீக்கர்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.2 ஆயிரத்தினை எடுத்துள்ளனர்.

இதனை கவனித்து விட்ட ராம்ஜி சத்தம் போடவே பண்ணை உரிமையாளர் ஜெயசூரியா மற்றும் கிராமமக்கள் திரண்டு பண்ணையில் நுழைந்து திருடி 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து திருமங்கலம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் மேலஉரப்பனூரினை சேர்ந்த அருண்பாண்டி (26), லட்சுமணன் (50) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: