மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் எடுக்க கோரிக்கை வைத்தால் அனுமதி: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

 

சென்னை: மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் எடுக்க கோரிக்கை வைத்தால் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், மண்பாண்ட தொழிலாளர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். வருடம் முழுவதும் வண்டல் மண் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தால் பரிசீலனை செய்து மண் எடுக்க அனுமதி அளிக்கப்படும். மழைக்கால நிவாரணம் தொடர்பாக தொழிலாளர்களின் பட்டியல் அடையாள அட்டை வைத்து இருந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

Related Stories: