மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உத்தரவை எதிர்த்து கலெக்டர், போலீஸ் கமிஷனர், தலைமை செயலர், ஏடிஜிபி உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணையை பிப்.4க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
