மலைச்சாலையில் சுற்றுலா வேன் தீப்பற்றி எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்

கூடலூர்: மதுரையில் தனியார் ஓட்டல் நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் தனியார் கேட்டரிங் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 60 வயதிற்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பின்பு 12 பேர் கொண்ட குழு சுற்றுலா வேனிலும், 4 பேர் காரிலும் கேரள மாநிலம் தேக்கடிக்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று மதியம் லோயர் கேம்ப்-குமுளி மலைச்சாலையில் தமிழ்நாடு வனத்துறை சோதனைச்சாவடி அருகே சென்றபோது, இன்ஜினில் இருந்து புகை வந்ததால் வேன் நிறுத்தப்பட்டு, அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அடுத்த சில நிமிடங்களில் தீ வேன் முழுவதும் பரவி எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Related Stories: