கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் குல் பிளாசா என்ற பலமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 1,200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயானது மேல் தளங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு பணியில் இருந்த 60 முதல் 70 பேரை காணவில்லை என்பதால், அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா கூறுகையில் இறப்பு எண்ணிக்கை 80ஆக இருக்கலாம் என்று தெரிவித்தார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
