விவாகரத்து முடிந்த கையோடு இளம் பாடகியுடன் ஒரே வீட்டில் பாடகர் குடித்தனம்?.. இசை உலகில் பெரும் பரபரப்பு

 

நாஷ்வில்: பிரபல பாப் பாடகர் கீத் அர்பன் மற்றும் நிக்கோல் கிட்மன் தங்களது 19 ஆண்டுகால திருமண வாழ்க்கையை கடந்த ஜனவரி 6ம் தேதி சட்டப்படி முறித்துக் கொண்டனர். இவர்களுக்கு சண்டே ரோஸ் (17), ஃபெய்த் மார்கரெட் (15) என இரண்டு மகள்கள் உள்ள நிலையில், விவாகரத்து ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 306 நாட்கள் நிக்கோல் கிட்மனிடமே குழந்தைகள் வளர்வார்கள் என்றும், கீத் அர்பன் வார இறுதி நாட்களில் மட்டும் குழந்தைகளை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜீவனாம்சம் தொடர்பான கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை. ஏற்கனவே தனது இசைக்குழுவைச் சேர்ந்த மேகி பாக் என்பவருடன் கீத் அர்பன் நெருக்கமாக இருந்ததாக வதந்திகள் பரவிய நிலையில், தற்போது நாஷ்வில் நகரில் தங்கி சோகமான பாடல்களை அவர் உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் 2025ம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியில் கீத் அர்பனுடன் இணைந்து பாடிய கார்லி ஸ்காட் காலின்ஸ் (26) என்ற இளம் பாடகியுடன், கீத் அர்பன் ஒரே வீட்டில் வசித்து வருவதாகப் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள பாடகி கார்லி ஸ்காட் காலின்ஸ், ‘நாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் அபத்தமானவை மற்றும் பொய்யானவை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விவாகரத்து முடிந்த சூட்டோடு இளம் பாடகியுடன் கீத் அர்பன் கிசுகிசுக்கப்படுவது இசை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: