சிலி : தெற்கு மற்றும் மத்திய சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 18 பேர் உயிரிழந்தனர். காட்டுத்தீயால் 18 பேர் உயிரிழந்த நிலையில் வீடுகளை விட்டு 50,000 பேர் வெளியேறியுள்ளனர். தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள உபிள், பயோபியா பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீ பரவி வரும் 2 மாகாணங்களில் அவசர நிலையை சிலி நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
