சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடிகர் சிவகார்த்திகேயன் யானை ஒன்றை தத்தெடுத்துள்ளார். சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடிகர் சிவகார்த்திகேயன் யானை ஒன்றை தத்தெடுத்துள்ளார். இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரக்கருதி என்ற பெண் யானையை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பல்வேறு விலங்குகளை தத்தெடுக்க https://aazp.in/adoption/ என்ற இணையதளத்தில் தகவல் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
