குடிச்சிட்டு வீட்டில போய் படுக்க ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்: அதிமுக பேச்சாளர் கஞ்சா கருப்பு சர்ச்சை

மதுரை: ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் தொடர்பாக நான் சினிமாவில் பேசினதைத்தான் எடப்பாடி அறிவிச்சிருக்காரு என நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார். மதுரையில் நேற்று நடந்த தனியார் ஓட்டல் திறப்பு விழாவில் அதிமுக பேச்சாளரும், நடிகருமான கஞ்சா கருப்பு பங்கேற்றார். அப்போது அவரிடம், செய்தியாளர்கள், ‘‘எடப்பாடி ஆண்களுக்கு பேருந்தில் பயணம் இலவசம் என அறிவிச்சிருக்காரே’’ என்றனர். அதற்கு பதிலளித்து கஞ்சா கருப்பு கூறியதாவது: நான் சொன்னதைத்தான் எடப்பாடி செஞ்சிருக்காரு… நான் வேங்கை படத்துல என்ன சொன்னேன். குடிச்சிட்டு வண்டியை தள்ளிட்டு வருவேன்.

போலீஸ் வந்ததும், குடிச்சுட்டு வண்டியை தள்ளிட்டுத்தானே வரேன். ஓட்டிக்கிட்டு போனாத்தானே புடிப்பீங்கம்பேன்… அப்படி ஒவ்வொரு மனுஷனும் குடிக்காம இருக்கனும்னா, சாயங்காலம் 6 மணிக்கு அந்தந்த ஏரியாவுல ஆண்களுக்கு ப்ரீனு ஒரு பஸ் அனுப்புங்க.. நாங்கபாட்டுக்கு குடிக்கிறோம். நாங்க பாட்டுக்கு வீட்டுக்கு போய் படுக்குறோம். பெண்களுக்கு மட்டும் போட்டிருக்கீங்கல்ல… ஆண்களுக்கு மட்டும் சட்டம் இல்லையா என்பேன்? அதைத்தான் கரெக்டா எடப்பாடி செஞ்சிருக்காரு. அதேபோல வீடுகள் கட்டி கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். எனக்கும்தான் வீடு இல்லை. எனக்கு முதலில் கொடுங்க… நான் படமெடுத்து நிறைய கஷ்டப்பட்டுட்டேன். அடுத்த பிறவியில் நான் பாம்பாக பிறந்தாலும் படமெடுக்க மாட்டேன். இவ்வாறு கூறினார்.

Related Stories: