முதல்வர் உத்தரவின்பேரில் மாதவரம், மணலி ஏரிகளில் படகுசவாரி கட்டணம் குறைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

 

மாதவரம்: சென்னை மாநகராட்சி சார்பில், மாதவரம், மணலி ஏரிகள் ரூ.24.41 கோடி செலவில் புனரமைத்து சுற்றுலாதளமாக மாற்றப்பட்டு, பல்வேறு அம்சங்களுடன் படகு குழாமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 13ம்தேதி எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு, 2 ஏரிகளிலும் படகு குழாமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள மாதவரம், மணலி ஏரிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வருகை தந்தனர். பின்னர், குரூப் படகு, வாட்டர் ஸ்கூட்டர் மற்றும் கால்மிதி போன்ற படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், படகு சவாரி கட்டணத்தை குறைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று காலை முதல் கட்டணம் குறைத்து வசூல் செய்யப்பட்டது. கோரிக்கை ஏற்று படகு சவாரி கட்டணத்தை குறைத்த முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று மாதவரம் மற்றும் மணலி ஏரிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆய்வு செய்தார். அப்போது, தொடர் விடுமுறை இருப்பதால் படகு சவாரி செய்ய பொதுமக்களின் வருகை அதிகமாகும். இதனால் கூடுதல் படகுகளை கொண்டு வரவும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தவும், சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

Related Stories: