வேலூர் சிஎம்சி மருத்துவமனை டாக்டர்கள் குடியிருப்பில் அமலாக்கத்துறை ரெய்டு

 

வேலூர்: வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை டாக்டர்கள் குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். வேலூர்-ஆற்காடு சாலையில் சிஎம்சி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாட்டில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை அமலாக்கத்துறையினர் 2 வாகனங்களில் தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான டாக்டர்கள் குடியிருப்புக்கு சென்றனர்.

அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்புபடையினர் உதவியுடன் குடியிருப்பில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்து வருகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக சோதனை நடக்கிறது என தெரியவில்லை. மருத்துவமனைக்கு மருந்துகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததா?, அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற விவரம் தெரியவில்லை. டாக்டர்கள் குடியிருப்பில் சோதனை நடந்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: