சென்னை: நாளை மறுநாள் முதல் களைகட்டுகிறது சென்னை சங்கமம் 2026 என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான எழுச்சி மேடையாக திகழ்கிறது சென்னை சங்கமம் நிகழ்ச்சி; சென்னை சங்கமத்துக்கு மீண்டும் நமது திராவிட மாடல் அரசில் புத்துயிர் கொடுத்துள்ளோம். சென்னை சங்கமம் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறார் கனிமொழி எம்.பி.; தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் களிப்புடன் சிறக்க அனைவரும் காண வேண்டும் என முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
