கந்தர்வகோட்டையில் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை மீன் மார்க்கெட்டில் விடுமுறை நாள் என்பதால் குவிந்த மக்கள் கூட்டம். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் நேற்று ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரப்பி இருந்தது. ஞாயிற்றுகிழமை வாரவிடுமுறை என்பதாலும் ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் சென்ற வந்து மாலை கலற்றி விரதம் முடிந்ததாலும் மீன், கோழிகறி, ஆட்டுகறி, நண்டு, போன்ற அசைவ உணவு பொருள்கள் வாங்கி செல்ல சுற்றுவட்டார கிராமபுற மக்கள் அதிக அளவில் வந்தனர்.

மீன் சந்தையில் கெண்டை, வாங்வால், பாறை, மாடவாய், பால் சுறா, மற்றும் நண்டுகள் விற்பனை ஆனது மக்கள் வளர்ப்பு மீன்களை வாங்குவதைவிட கடல்மீன் வாங்க ஆர்வம் காட்டினார்கள். மீன்களை சுந்தம் செய்து கொடுக்க ஏராளமானோர் கத்தி, செதில் நீக்கி, அருவாள்மனையுடன் இருந்தனர். மீன்களை சுந்தம் செய்து வெட்டி கொடுக்க கிலோ ஒன்று இருபது ரூபாய் என நிர்ணயம் செய்து உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: