சிலாவட்டம் ஊராட்சியில் குப்பைகள் அகற்ற புதிய வாகனங்கள்

மதுராந்தகம், ஜன.12: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சிலாவட்டம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சிலாவட்டம், மேல் சிலாவட்டம், கலைஞர்நகர், அய்யனார் கோவில் பகுதி உள்ளிட்ட கிராமங்கள் அடங்கியுள்ளன. இப்பகுதியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் குப்பை கழிவுகளை சேகரிக்க 2 மின்சார வாகனங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டன.

இந்த வாகனங்களின் தொடக்க நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி பாலு, ஊராட்சி செயலர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வாகனங்கள் மூலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் என தெரிவித்தனர்.

 

Related Stories: