சென்னை: கிராம உதவியாளர்களின் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அனைத்து கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் : கிராம உதவியாளர்களின் பணி நிலைமையையும், அவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும் கருத்தில் கொண்டு, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அன்புமணி : ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
