×

தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் திருவிழா பொங்கல்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேச்சு

சென்னை: பொங்கல் என்பது தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் ஒரு திருவிழாவாகும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:

சென்னை பத்திரிகையாளர் மன்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்கள். நானும் பத்திரிகையாளனாக இருந்து தான் என் வாழ்க்கையை தொடங்கினேன். பல்வேறு இடங்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் தற்போது அனைவரும் ஒரு குடும்பமாக சேர்ந்து இவ்விழாவை நடத்துவது ஒரு சிறப்பாகும்.

பொங்கல் என்பது தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் ஒரு திருவிழாவாகும். அனைவரும் சேர்ந்து நடத்தும் ஒரு திருவிழாவாக பொங்கல் விழா இருக்கிறது. இது போன்று பல்வேறு விழாக்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்த வேண்டும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தேர்தல் நடத்தி அதுவும் 1500 உறுப்பினர்களில் 1450 உறுப்பினர்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான்காவது தூணாக இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்று போராடும் பத்திரிகையாளரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இதில் நான் இருந்தேன் என்பது கூடுதல் பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Pongal ,Tamils ,Madras High Court ,Judge ,A.D. Jagadish Chandra ,Chennai ,Press ,Club ,Chepauk, Chennai ,Madras High… ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...