×

3 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 20 பயணிகள் படுகாயம்

திருப்பூர்: ஊட்டியில் இருந்து சேலம் நோக்கியும், கோவையிலிருந்து சேலம் நோக்கியும், திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கியும் பஸ்கள் அடுத்தடுத்து கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வழியாக நேற்று காலை பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதில், திருப்பூரிலிருந்து ஈரோடு சென்ற அரசு பஸ் பல்லகவுண்டம்பாளையம் அருகே முன்னாள் சென்ற வாகனம் திடீரென நின்றதால், அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்த 2 பஸ்கள்அடுத்தடுத்து அதன் மீது மோதியது. இதில் அரசு பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. அதிலிருந்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவலறிந்த ஊத்துக்குளி போலீசார் அவர்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Tiruppur ,Ooty ,Salem ,Coimbatore ,Erode ,Coimbatore-Salem National Highway ,Uthukuli ,Tiruppur district ,Erode… ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...