கவர்தா: சட்டீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள பஜார் சார்பட்டா மற்றும் பகாரா கொள்முதல் மையங்களில் 2024-25 பருவத்தில் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. அங்கு 26 ஆயிரம் குவிண்டால்( 26 லட்சம் கிலோ) நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன. அதிகாரிகள் சென்று பார்த்த போது நெல் மணிகள் இல்லை. விசாரணையில் எலிகள், கரையான்கள் மற்றும் பூச்சிகள் அதை தின்று விட்டதாக அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. சட்டீஸ்கரில் ஒரு குவிண்டால் நெல் சுமார் ரூ.3,100 (குறைந்தபட்ச ஆதார விலை + போனஸ்) விலைக்கு வாங்கப்பட்டது. தற்போது காணாமல் போன நெல் மணிகள் மதிப்பு 8 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.5 கோடி மதிப்பு நெல் மணிகள் காணாமல் போன மையத்தின் பொறுப்பாளர் பிரிடேஷ் பாண்டேவுக்கு எதிராக அரசு அளவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
