கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: 13 ஆயிரம் கோழி, வாத்துகளை கொல்லும் பணி தொடக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான வாத்து, கோழிகள் உள்பட பறவைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென செத்து விழுந்தன. அதைத்தொடர்ந்து நடத்திய பரிசோதனையில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த சில தினங்களாக ஆலப்புழா மாவட்டத்தில் அம்பலப்புழா, கருவாற்றா ஆகிய பகுதிகளில் உள்ள கோழி, வாத்து, காடை பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து இங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்து பறவை இறைச்சி, முட்டை ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் கோழி, வாத்து, காடை உள்ளிட்ட 13 ஆயிரம் பறவைகளை கொல்லும் பணி நேற்று தொடங்கியது.

Related Stories: