×

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு மோடியே காரணம்: அமெரிக்க அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக் பேச்சு

வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு மோடியே காரணம் என அமெரிக்க அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார். ‘ஆல்-இன் பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் பேசிய லூட்னிக், 2025 ஜூலை மாதத்தில் பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

இந்தியாவுடனான ஒப்பந்தம் முன்னதாகவே நடைபெறும் என்று கருதி, தாங்கள் மற்ற நாடுகளுடன் முன்னரே பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினார். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்தோம். அவர்களுக்கு முன்பே இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று நம்பினோம்.

அந்த ஒப்பந்தங்கள் அதிக விகிதத்தில் செய்யப்பட்டன, பின்னர் இந்தியா பின்வாங்கியது. இது அதிபர் டிரம்ப்பின் ஒப்பந்தம் அவர்தான் அதை முடிப்பவர். ஆனால் பிரதமர் மோடி அதிபர் டிரம்பை அழைக்கவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேசாததே வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்படாததற்கு காரணம்.

இரு நாட்டு தலைவர்களும் அரசியல் ரீதியில் ஒப்பந்தம் குறித்து முடிவு எடுத்தால்தான் அதை இறுதிசெய்ய முடியும். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளார். 500% வரி விதிக்கும் சட்டம் இயற்ற முடிவு செய்துள்ள மறுநாள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அமைச்சர் லுட்னிக் பேசினார்.

Tags : Modi ,India ,US ,Minister ,Howard Lutnick ,Washington ,Lutnik ,United States ,
× RELATED ஈரான் பற்றி எரிகிறது: 62 பேர் பலி: இன்டர்நெட், தொலைபேசி சேவை முடக்கம்