×

1800 கிமீ தூரத்தை 13 நிமிடத்தில் கடந்தது ஒரேஷ்னிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல்: 4 பேர் பலி, 22 பேர் காயம்

கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றது. நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது அதிகாலை வரை ரஷ்யா தாக்குதல் நடத்தியது. மேற்கு நகரமான லிவிவில் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி முக்கிய உள்கட்டமைப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதிவேக ஒரேஷ்னிக் ஏவுகணைகள் மணிக்கு 13 ஆயிரம் கி.மீ.வேகத்தில் பயணித்தன. இதால் 1800 கிமீ தூரத்தை ரஷ்ய ஏவுகணைகள் 13 நிமிடத்தில் கடந்து அதிரடியாக தாக்கின. நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் கீவின் பல மாவட்டங்கள் தாக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 4பேர் உயிரிழந்தனர், மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

Tags : Ukraine ,Kiev ,Russia ,Lviv ,
× RELATED ஈரான் பற்றி எரிகிறது: 62 பேர் பலி: இன்டர்நெட், தொலைபேசி சேவை முடக்கம்