காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1000 ஆட்டோ ஓட்டுநருக்கு சீருடை, பொங்கல் பரிசு

ஆலந்தூர், ஜன.9: பரங்கிமலையில் நடந்த திராவிட பொங்கல் விழாவில் 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் பொங்கல் பரிசுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக திராவிட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 1,000 ஆட்டோ ஓட்டுநருக்கு சீருடை, பொங்கல் பரிசு போன்றவை வழங்கும் விழா பரங்கிமலையில் உள்ள மான்போர்ட் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், என்.சந்திரன், ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்டோன்மென்ட் நகர திமுக செயலாளர் டி.பாபு வரவேற்றார்.

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆண், பெண் உள்பட 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். விழாவில் பம்மல் மண்டலக்குழு தலைவர் வே.கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் இப்ராகிம், பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், விவேகானந்தன், பூபாலன், மாவட்ட இளைஞர் அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் கவுன்சிலர்கள் பூங்கொடி ஜெகதீஸ்வரன், செல்வேந்திரன் சாலமோன், முன்னாள் கவுன்சிலர் விஜய் சங்கர், உலகநாதன், ஜெகதீஸ்வரன், நடராஜ், மனோகரன், பட்ரோடு ராஜ், ராமு, தங்கம் ஆதம் லட்சுமிபதி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சுனில், பால்ராஜ், பிரவீன்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கலாநிதி குணாளன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் காஜா மொய்தீன், லியாகத் அலி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சுலைமான், தரணிவேந்தன் மற்றும் விஜய் பாபு அஜித், ஆனந்தராஜ், சுதாகர், தினகரன், மகளிர் அணி பாண்டிச்செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: