சின்னமனூர், ஜன.7: சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள வெள்ளையம்மாள்புரம் காலனியில் குடியிருப்பவர் ஜெயப்பிரகாஷ். இந்நிலையில் நேற்று இவர், தனது வீட்டிற்குள் பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் சின்னமனூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைபு நிலைய அலுவலர் வெங்கட்குமார் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டிற்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பை, லாவகமாக பிடித்தனர். இதனைத்தொடர்ந்து பிடிபட்ட பாம்பை, சின்னமனூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் கொண்டு விட்டனர். விடப்பட்டனர்.
